Last Updated:Aug 03, 2026 7:53 AM IST
கோவையில் நடைபெற்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியது வைரல்.

கோவையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒரு காரணத்துக்காக என்னுடைய பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. இருந்தாலும், தமிழகம் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் நான் பார்த்தேன். 5000 பேருக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளீர்கள். உங்களால் 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு துணி வாங்கி கொடுத்துள்ளீர்கள். இன்னும் பல விஷயங்களை செய்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் நான் கவனித்து வருகிறேன். இந்த அன்புக்கு நன்றி.
12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு விடுமுறைக்கும் கோயம்புத்தூர் வருவேன். மாமா கார் அனுப்புவார். ஆடு மாடு மேய்ப்பது, மாட்டு வண்டி ஓட்டுவது, கிணற்றில் குளிப்பது என எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். கடந்த ஆண்டு என் மகன், மகளை அழைத்து வந்து நான் விளையாடிய இடங்களை காட்டினேன். என் குல தெய்வ கோயிலுக்கு சென்று வந்தேன்.
செல்போனுக்கு நாம் கொடுக்கும் கவனத்தை குடும்பத்துக்கு கொடுப்பதில்லை. இதில் நானும் இருக்கிறேன். செல்போன் பயன்பாட்டை நானும் குறைக்க வேண்டும். செல்போனில் வரும் மெமரிஸ் விடுங்கள். யதார்த்தமான நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். சிறு வயதில் கண்ணாமூச்சி என பல விளையாட்டுகளை விளையாடியிருக்கிறேன். இதெல்லாம் சென்னையில் கிடைக்காது. மறக்க முடியாத அனுபவங்கள்!
கருப்பு படத்தை வெற்றிப் படமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் 100-வது நாள் அன்று உங்களை சந்திக்கிறேன். ராதிகா இன்று இந்த நிகழ்வில் இல்லை என்றாலும், என்னுடைய ஆரம்ப நாட்களில், என் படங்களில் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். நடிகர் கார்த்தி அமெரிக்கா செல்வதற்கு உதவியவர் ராதிகா. அப்போது அமெரிக்கா செல்ல வேண்டுமென்றால், வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும். அதற்காக பணம் கொடுத்து உதவியவர் ராதிகா.
இந்தப் படத்துக்காக தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் மமிதா. எனக்கு இந்தப் படம் புதிய அடையாளத்தை கொடுக்கும். அதை கொடுத்தவர், இயக்குநர் வெங்கி அட்லூரி. இந்தப் படத்தில் 3 பெண்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் உறவுகள் குறித்து அழகாக பேசும். படம் முழுவதும் உங்கள் உதடுகள் அருகே சின்ன சிரிப்பு இருக்கும்.
இந்தப் படம் குடும்பம், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருக்கும். இந்தப் படம் ரசிகர்களுக்கான படம். ரசிகர்களின் குடும்பங்களுக்கான திரைப்படம். 28 வருடத்துக்கு மேல் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. நம்பிக்கை இருந்தால், வாழ்வில் நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். தினம் தினம் காதலியுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்.
எல்லாரும் மாறுவார்கள். வாழ்வில் எல்லாமே மாறும். ஆனால், அவர்கள் மீது இருக்கும் காதல் மாறவே கூடாது. திருமணத்துக்குப் பின் பெண்கள் அனைத்தையும் சமரசம் செய்கிறார்கள். அவர்களுக்கு காதலை விட மரியாதை அதிகம் கொடுங்கள்” என்றார்.

இந்தோனேசியா | 250 பேர் பயணித்த பயணிகள் கப்பலில் தீ விபத்து... நேர்ந்த சோகம்!
இந்தோனேசியாவில் 250 பயணிகள் சென்ற கப்பலில் தீ விபத்து
கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து சென்ற கப்பலில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்கிறது.
.png)



English (US) ·