Last Updated:Aug 03, 2026 11:40 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் மீண்டும் ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். இதில் இருந்து எப்படி மீள்வார் என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று பார்க்கிற்கு கனகாவுடன் வந்த மனோஜ் அங்கு வீடியோ எடுத்து கொண்டிருந்த பார்வதி மற்றும் சிவன் ஆகியோரின் கண்களில் சிக்காமல் மறைந்து கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் ஜோதிடரை தொடர்பு கொண்டு பூங்காவிற்கு வர சொல்கிறார். அங்கு வந்த ஜோதிடர், பார்வதியை பொது இடத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடாது நான் அரசு அதிகாரி என்று கூறி எச்சரித்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார்.
இதனால் மனோஜ் ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்கிறார். இதற்கிடையில், மீனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார். அவருடன் முத்துவும் மனோஜும் வீட்டிற்கு வருகிறார்கள். மீனாவை பார்த்ததும் விஜயா அதிசயமாக உட்காரு எப்படி இருக்க என்று எல்லாம் நலம் விசாரிக்கிறார். மீனாவும் நலமாக இருக்கேன் என்று சொல்லவே அறைக்கு சென்று ஓய்வெடுக்க சொல்கிறார்.
அதன் பிறகு, முத்து, மருத்துவமனையில் நடந்ததை குடும்பத்தினரிடம் பகிர்கிறார். ரோகிணி மருத்துவ பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு வந்தபோது, குழந்தையின் தந்தை என்ற இடத்தில் 'மனோஜ்' என்ற பெயரையே பதிவு செய்திருப்பதாக முத்து கூறுகிறார்.
குழந்தை பிறந்த பிறகு பிறப்புச் சான்றிதழிலும் அதே பெயர் இடம்பெற்றால், அது சட்டபூர்வ ஆவணமாக மாறிவிடும் என்றும், பின்னர் அதை மாற்றுவது மிகவும் சிக்கலாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார். இந்த தகவலைக் கேட்ட விஜயா கடும் அதிர்ச்சியடைகிறார். மருத்துவமனையில் சொல்லி, மனோஜின் பெயரை அதிலிருந்து மாற்ற முடியுமா என்று கேட்க, அது சட்ட ஆவணம் என்பதால் மாற்ற இயலாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து விஜயா, வழக்கம்போல ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைக்கிறார்.
"ஆவணத்தில் உள்ள பெயரை மாற்ற முடியாவிட்டால், மனோஜின் பெயரையே மாற்றிவிடலாமே!" என்று கூற, அங்கிருந்த அனைவரும் சிரிப்பில் மூழ்குகின்றனர். ஏற்கனவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் மனோஜின் பெயர் இருப்பதால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதும் தெளிவாகிறது.
மற்றொரு பக்கம், மீனாவை சந்திக்க மேஸ்திரி ஒருவர் வீட்டிற்கு வருகிறார். வீட்டின் மாடியில் புதிய அறை கட்டுவது குறித்து அளவீடு செய்து செலவுத் திட்டம் தயாரிக்க அவர் வருகிறார். இந்த ஏற்பாட்டை செய்தது சுவேதா என்பதும் தெரியவருகிறது. மீனா முத்து மகிழ்ச்சியாக தங்களது புதிய வாழ்க்கைக்கு தயாராகி வருகின்றனர்.

எவ்ளோ குறைஞ்ச விலையில் கிடைத்தாலும், இந்த 7 பிரச்சனை இருந்தால் இளநீரை தவிர்த்திடுங்க!
இளநீர் என்னதான் இயற்கை பானமாக இருந்தாலும், அனைவருக்கும் அது ஏற்றதல்ல.
சில பிரச்சனைகள் இருப்பவர்கள், இளநீரை தவிர்க்க வேண்டும்.
அது ஏன், யாரெல்லாம் இந்தப் பட்டியலில் உள்ளனர் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்
.png)



English (US) ·