Last Updated:Aug 02, 2026 3:46 PM IST
School Holiday Announcement: இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 08.08.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய உதவி செய்தாலும் அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுச் சுயவிளம்பரம் தேடும் போக்கை இன்றைக்குப் பரவலாகப் பார்க்கிறோம். ஆனால் வல்வில் ஓரி, காரி, ஆய், நள்ளி போன்ற சங்ககால கடையெழு வள்ளல்கள், எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமலும் அள்ளிக் கொடுத்தனர்.
மனிதநேயமும் சமூக விழுமியங்களும் தடம்மாறும் இந்த 21ம் நூற்றாண்டு நவீன காலத்தில் அவர்களை பற்றிய நியாபகங்கள் மட்டும் தான் தமிழ் சமூகத்துக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
அந்த வகையில், சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17,18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் கொல்லிமலை வட்டத்தில் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் எனப் பலரும் குடும்பத்துடன் சென்று விழாவில் பங்கேற்கும் வகையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி (நாளை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 08.08.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாகச் செயல்படும்.
இந்த விடுமுறையானது 1881 வருட செலாவணி முறிச்சட்டத்தின் (Under Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.
மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசுப் பாதுகாப்பு சார்ந்த அவசரப் பணிகளைக் கவனிப்பதற்காகக் குறிப்பிட்ட பணியாளர்களுடன் குறைந்தபட்ச அளவில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

El Nino: மேட்டூர் அணை 100 அடி வந்தாலே பெரிய விஷயம்... டெல்டா விவசாயிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து..?
எல்நினோ காரணமாக, இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டுவது கடினம்
100 அடியை எட்டினாலே பெரிய விஷயம்
வடகிழக்கு பருவமழையே ஒரே தீர்வு
.png)



English (US) ·