Last Updated:Nov 01, 2026 3:28 PM IST
மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமான 'I'm Game', வெற்றிகரமான திரையரங்க ரன்னிங்கை தொடர்ந்து தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகத் தயாராகி உள்ளது. கடந்த செப்டம்பர் 3 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் துல்கர் சல்மான் 'டான் ஜான்' என்ற வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். பணத்தையும் சிலிர்ப்பூட்டும் சாகசங்களையும் மட்டுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பணக்காரக் கதாபாத்திரத்தில் அவர் திறம்பட நடித்துள்ளார்.
டான் சந்திக்கும் ஒரு விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து அவருக்கு நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் விசித்திரமான திருப்பங்களை மையமாகக் கொண்டு இப்படம் நகர்கிறது. குறிப்பாக, இக்கதையில் கிரிக்கெட் பந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படத்தை பிளாக்பஸ்டர் படமான 'RDX' இயக்கிய இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளதோடு, அந்தோனி வர்கீஸ் பேபே (விக்னேஷ் என்ற கிரிக்கெட் வீரராக), மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் கதிர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படம் வெளியாகவுள்ள ஓடிடி தளமும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6, 2026 அன்று 'ஜியோ ஹாட்ஸ்டார்' (JioHotstar) ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது.
மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று படக்குழு சமூக வலைத்தளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டரைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளதால் துல்கர் சல்மான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நெருங்கும் தீபாவளி... இந்த தப்பெல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க! உஷார்....
தீபாவளி என்றாலே பட்டாசும் கொண்டாட்டமும்தான்.
ஆனால் அந்தப் பட்டாசே பிரச்சனையாகவும் மாறலாம்.
தீ விபத்தில்லா தீபாவளிக்கு, என்னென்ன செய்யவேண்டுமென இங்கே தெரிஞ்சுக்கோங்க!
.png)







English (US) ·