Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு RBI புதிய விதிகள்.. அக்டோபர் 1 முதல் எல்லா வங்கிகளிலும் முக்கிய மாற்றம்

1 month ago 7

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட்ல முதலீடு செய்ய நினைச்சாலோ அல்லது ஏற்கெனவே செய்திருந்தாலோ, இந்த செய்தி உங்களுக்கு ரொம்ப முக்கியம். ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருது.

16

ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிரடி மாற்றங்கள்

Image Credit : Google

ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிரடி மாற்றங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி தொடர்பான விதிகளில் ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அக்டோபர் 1, 2026 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும். இனி, ஒரே FD திட்டத்திற்கு வெவ்வேறு வங்கிக் கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

26

ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி விகிதம்

Image Credit : Google

ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி விகிதம்

36

ஃபிக்ஸட் டெபாசிட்

Image Credit : our own

ஃபிக்ஸட் டெபாசிட்

புதிய விதிகளின்படி, ஒரே நாளில் ஒரே தொகைக்கு ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே வட்டி விகிதம்தான் வழங்க வேண்டும். கிளை மாறுவதால் வட்டி விகிதத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஒரே மாதிரியான FD-க்களுக்கு அனைத்து வாடிக்கையாளர்களையும் சமமாக நடத்த வேண்டும், எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது என ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது.

46

எவ்வளவு வட்டி?

Image Credit : our own

எவ்வளவு வட்டி?

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, வங்கிகள் தகவல்களை வெளியிடுவதற்கும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுத்துள்ளது. இனிமேல், எல்லா வங்கிகளும் தங்கள் இணையதளத்தில் FD வட்டி விகிதங்களின் முழுப் பட்டியலையும் முன்கூட்டியே வெளியிட வேண்டும். இதனால், வாடிக்கையாளர்கள் FD போடுவதற்கு முன்பே ஒவ்வொரு கால அளவுக்கும் எவ்வளவு வட்டி என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

56

பல்க் டெபாசிட்

Image Credit : Getty

பல்க் டெபாசிட்

பெரிய தொகையான 'பல்க் டெபாசிட்'களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். வங்கிகள் ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்குள் தங்கள் இணையதளத்தில் பல்க் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கி காலை 10:10 மணி வரை அதிகபட்ச அவகாசம் கொடுத்துள்ளது. இந்த விதி என்ஆர்ஐ டெபாசிட்களுக்கும் பொருந்தும்.

66

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Image Credit : Getty

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த புதிய விதிகளால் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுதான் மிகப்பெரிய நன்மை. இனி ஒரே மாதிரியான FD-க்கு ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரே வட்டி விகிதம் கிடைக்கும். வட்டி விகித விவரங்கள் இணையதளத்தில் சுலபமாக கிடைப்பதால், வெவ்வேறு வங்கிகளின் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்வது எளிதாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read Entire Article