Tamil
agriculture Aug 02 2026
Author: Asianet News Image Credits:pixabay
Tamil
அதிகமாக தண்ணீர் ஊற்றுவது
செடிகளுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினால், அதன் வேர்கள் அழுகிவிடும். மேல் மண் காய்ந்த பிறகு மட்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றினால் போதும்.
Image credits: pixabay
Tamil
போதுமான சூரிய ஒளி இல்லை
பெரும்பாலான காய்கறிச் செடிகளுக்கு தினமும் குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி தேவை. அதனால், வெயில் படாத இடத்தில் செடிகளை வைக்காதீர்கள்.
Image credits: pixabay
Tamil
வடிகால் வசதி இல்லாதது
நீங்கள் பயன்படுத்தும் க்ரோ பேக் அல்லது தொட்டிகளில், அதிகப்படியான தண்ணீர் வெளியேற வடிகால் துளைகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Image credits: pixabay
Tamil
தவறான தொட்டித் தேர்வு
செடிகளின் வேர்கள் பரவி வளர போதுமான ஆழம் மற்றும் அகலம் கொண்ட தொட்டிகளைத் தேர்வு செய்வது அவசியம். சிறிய தொட்டிகளைத் தவிர்க்கவும்.
Image credits: pixabay
Tamil
சாதாரண தோட்ட மண்
தோட்டத்து மண்ணை மட்டும் பயன்படுத்தினால், அது தொட்டியில் இறுகிவிடும். அதற்குப் பதிலாக, தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் கலந்து இலகுவான மண் கலவையை பயன்படுத்துங்கள்.
Image credits: pixabay
Tamil
இடைவெளி இல்லாமல் நடுவது
ஒரே தொட்டியில் பல செடிகளை நெருக்கமாக நட்டால், அவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் சரியாகக் கிடைக்காது. அதனால், செடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி விடுவது அவசியம்.
Image credits: pixabay
Tamil
பூச்சிகளைக் கவனிக்காமல் விடுவது
செடிகளில் பூச்சி அல்லது நோய் தாக்குதலை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லையென்றால், செடி முழுவதும் பரவி, விரைவில் அழிந்துவிடும். இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.
Image credits: pixabay
.png)
1 month ago
14



English (US) ·