8-வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.32,940-ஆ? ரூ.69,000-ஆ? கடந்த காலத் தரவுகள் சொல்வது என்ன?

30 minutes ago 1

Last Updated:Nov 08, 2026 9:04 PM IST

8th Pay Commission minimum salary : கடந்த கால ஊதியக் குழுவின் பரிந்துரைகள் காரணமாக, அடிப்படைச் சம்பளம் வெறும் ₹55ல் இருந்து ₹18,000 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 4-வது ஊதியக் குழுவில்தான் சம்பளம் அதிகபட்சமாக 3.83 மடங்கு (ரூ.196-ல் இருந்து ரூ.750 ஆக) உயர்த்தப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளங்களை ஊதியக் குழு திருத்தியமைக்கிறது. இந்த குழுவை தோராயமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசாங்கம் அமைக்கிறது. ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஊதியத்தையும், அவற்றுக்கு இடையிலான சம்பளப் படிநிலைகளையும் இந்தக் குழுவே தீர்மானிக்கிறது.

கடந்த கால ஊதியக் குழுவின் பரிந்துரைகள் காரணமாக, அடிப்படைச் சம்பளம் வெறும் ₹55ல் இருந்து ₹18,000 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 4-வது ஊதியக் குழுவில்தான் சம்பளம் அதிகபட்சமாக 3.83 மடங்கு (ரூ.196-ல் இருந்து ரூ.750 ஆக) உயர்த்தப்பட்டது. இருப்பினும், விலைவாசி அதிகரிப்பும், ஊழியர்களின் பலநிலை படிகளும் அடிப்படைச் சம்பளத்தோடு இணைக்கப்பட்டதும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும். 4வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் 'உண்மையான' நிகர சம்பள உயர்வு குறைவானதாகவே இருந்தது . 

8-வது ஊதியக் குழு

அதேபோன்று,  ஏழாவது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. கிட்டத்தட்ட, 157 % அதிகரிப்பாகும். இருப்பினும், பின்னணி காரண காரணிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஊதியக் குழு அமலுக்கு வருவதற்கு முன்பு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி 125 சதவீதமாக இருந்தது. அதாவது,  அடிப்படை ஊதியத்தை (7000) விட அகவிலைப்படியே அதிகமாக இருந்தது. எனவே, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியையும் ஒன்றாக இணைத்தே புதிய அடிப்படை ஊதியம் உருவாக்கப்பட்டது.

8-வது ஊதியக் குழு

அரசு நிர்ணயித்த மொத்த Fitment factor (ஃபிட்மென்ட் காரணி) 2.57 ஆகும். இதில் 2.25 என்ற விகிதம் முந்தைய அகவிலைப்படியை ஈடுசெய்வதிலேயே உள்ளடங்கிவிட்டது. இதன் விளைவாக, ஊழியர்களுக்குக் கிடைத்த 'உண்மையான' நிகர ஊதிய உயர்வு வெறும் 14.29 சதவீதம் மட்டுமே. ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்த இந்த உயர்வுதான், நவீன கால  வரலாற்றிலேயே மிகக் குறைவான ஊதிய உயர்வாகப் பொருளாதார நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, 6வது ஊதியக் குழுவில் சுமார் 25 முதல் 30 சதவீத உயர்வு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவில்  என்ன எதிர்பார்க்கலாம்? முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், கடந்த 2025 நவம்பர் 3-ம் தேதி 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. ஜனவரி 1, 2026-ஐ இதன் பரிந்துரைகளுக்கான அடிப்படைத் தேதியாக  அரசு நிர்ணயித்துள்ளது. எனினும், இவை எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்பதை அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், 2027 மே மாதம் அளவிலேயே இதன் பரிந்துரைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prime Minister Narendra Modi

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, நிதி மேலாண்மை, மேம்பாடு மற்றும் மக்கள் நலனுக்கான வளங்கள் ஆகியவை 8-வது ஊதியக் குழுவின் பிரதான ஆய்வு வரம்புகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்முறையாகப் 'பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நிதிச்சுமை' குறித்த ஆய்வும் இக்குழுவின் வரம்புகளுக்குள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

8-வது ஊதியக் குழுவிடம், தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.69,000 ஆக உயர்த்த வேண்டும் எனவும், 3.83 என்ற '  Fitment factor  நிர்ணயிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், புதிய ஊதிய உயர்வுக்கான இறுதி முடிவு என்பது, தற்போதைய அகவிலைப்படி மற்றும் அரசு முடிவெடுக்கும் உண்மையான ஊதிய உயர்வு (Real raise) ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவேளை 7-வது ஊதியக் குழு வழங்கிய அதே 14 சதவீத உண்மையான ஊதிய உயர்வை, 60 சதவீத அகவிலைப்படியுடன் இணைத்து வழங்கினால், ஃபிட்மென்ட் காரணி 1.83 ஆக மட்டுமே இருக்கும். அதன்படி கணக்கிட்டால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.32,940 ஆக உயரும். 7-வது ஊதியக் குழுவின் 2.57 Fitment factor என எடுத்துக் கொண்டால் உத்தேச குறைந்தபட்ச ஊதியம் ரூ.46,260 ஆக உயரும். தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் 3.83 என்ற Fitment factor ஏற்றுக் கொள்ளப்பட்டால்  தான் ரூ.68,940 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் காயம்பட்டுவிட்டதா? உடனே இந்த 3 விஷயங்களை செய்யுங்க!

பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் காயம்பட்டுவிட்டதா? உடனே இந்த 3 விஷயங்களை செய்யுங்க!

  • தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் காயம்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • என்ன செய்யவே கூடாது?

  • மருத்துவர் சொல்லும் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article