ரூ.200 கோடிக்கு மேற்பட்ட கட்டுமானப் பணிகள்; தமிழகத்தில் புதிய கழகம் அமைத்து அரசாணை வெளியீடு!

31 minutes ago 1

Last Updated:Nov 08, 2026 9:09 PM IST

தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேற்பட்ட கட்டுமானப் பணிகளுக்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News18
News18

தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அரசுக் கட்டடங்களுக்கான பணியை மேற்கொள்ள தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கிடும் வகையில் கட்டடங்களை உருவாக்கும் பணிகளையும் இக்கழகம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தேவையான கட்டடம் கட்டுவதற்குக் கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்கும் பணிகளிலும் இந்த கட்டுமானக் கழகம் ஈடுபடும்.

ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் நிறுவப்படவுள்ள தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம், முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத்தரத்துடன் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி நகரங்கள், வணிக பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் திட்ட மேலாண்மை ஆலோசனை, தரமான எழில்மிகு கட்டடக் கலை வரைபடங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article