25.5 PS எஞ்சின் பவர், 37 மிமீ USD ஃபோர்க்குகள்: ரூ.1.60 லட்சத்தில் கூகுள் மேப்ஸ் வசதியுடன் பஜாஜ் பல்சர் NS200!

1 hour ago 2

புதிய 5 இன்ச் TFT டிஸ்ப்ளே, கூகுள் மேப்ஸ் மிரரிங், ரைடிங் மோடுகள், மேம்படுத்தப்பட்ட 25.5 பிஎஸ் எஞ்சின் பவருடன் புதிய பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் விலை, சிறப்பம்சங்களை பற்றி பார்போம்.

2 Min read

Published : Oct 24 2026, 05:22 PM IST

15

பஜாஜ் பல்சர் NS200 புதிய மாடல்

பஜாஜ் பல்சர் NS200 புதிய மாடல்

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பஜாஜ் பல்சர் NS200 பைக், தற்போது புதிய அப்டேட்டுகளுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய 5 இன்ச் TFT திரை, கூகுள் மேப்ஸ் வசதி, ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலுக்கு ரூ.1,60,374 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

25

எஞ்சின் செயல்திறன் & பவர் மேம்பாடு

எஞ்சின் செயல்திறன் & பவர் மேம்பாடு

புதிய அப்டேட்டில் பைக்கின் எஞ்சின் செயல்திறனிலும் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தி வந்த 199.5 சிசி எஞ்சின், தற்போது 25.5 பிஎஸ் பவரை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 4 வால்வுகள் மற்றும் லிக்யூடு கூலிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

35

புதிய & நவீன தொழில்நுட்ப வசதிகள்

புதிய & நவீன தொழில்நுட்ப வசதிகள்

TFT டிஸ்ப்ளே & கூகுள் மேப்ஸ்: ஏற்கெனவே வழங்கப்பட்ட எல்சிடி திரைக்குப் பதிலாக தற்போது 5 அங்குல TFT டிஸ்பிளே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை மிரரிங் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பயணத்தின்போது வழித்தட விவரங்களைப் பார்ப்பது எளிதாக இருக்கும்.

ரைடிங் மோடுகள் & டிராக்ஷன் கன்ட்ரோல்: எலக்ட்ரானிக் த்ராட்டில் பை வயர் (ETB) தொழில்நுட்பமும் இந்த பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு ரைடிங் மோடுகளைப் பயன்படுத்த முடியும். இத்துடன் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்: ஸ்போர்ட்ஸ் ஷிஃப்டர் வசதி, ரைடரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய அட்ஜஸ்டபிள் லிவர்கள், அவசரமாக பிரேக் போடும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் பேனிக் பிரேக் அலர்ட் வசதி, மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட் மற்றும் ஹசார்டு சுவிட்ச் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

45

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் & ஹார்டுவேர்

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் & ஹார்டுவேர்

பைக்கின் முன்புற சஸ்பென்ஷனிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 மிமீ USD முன்புற ஃபோர்க்குகளுக்குப் பதிலாக, தற்போது 37 மிமீ USD ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் 130/70-R17 ரேடியல் டயர் இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றங்கள் பைக்கின் ஹார்டுவேர் அமைப்பில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான அப்டேட்டுகளாகக் கூறலாம்.

55

விலை & சந்தை மதிப்பு

விலை & சந்தை மதிப்பு

புதிய வசதிகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட பவர் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்ட பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் விலை டெல்லியில் ரூ.1,60,374 (எக்ஸ்-ஷோரூம்) என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்சர் NS200 பைக்கின் ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் பெரிமீட்டர் ஃபிரேம் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொண்டு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் பஜாஜ் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக, TFT திரை, ரைடிங் மோடுகள் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற வசதிகள் இந்த பைக்கை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இதன் இலகுவான கையாளுமை இதனைச் சிறந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகத் தேர்வில் முன்னிறுத்துகிறது.

Read Entire Article