Last Updated:Oct 26, 2026 1:30 PM IST
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அக்டோபர் 31 இல் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் 31-ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் த.வெ.க.வினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
.png)







English (US) ·