ரஜினியின் ‘தர்மன்’.. சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படங்களை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்! 

1 hour ago 1

Last Updated:Oct 24, 2026 8:52 PM IST

ரஜினியின் தர்மன் மற்றும் சிவகார்த்திகேயனின் சேயோன் ஆகிய இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படங்களின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.600 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்ரன், ராஷிகண்ணா, ராம் பொத்தினேனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, கமல்ஹாசன் தயாரிக்கும் மற்றொரு திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடிக்கிறார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மதுரையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த 2 படங்களும், திரையரங்குக்கு பிறகு ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article