மியன்மார் ராணுவத்தின் தாக்குதல்கள்: பச்சிளங்குழந்தை உட்பட 15 பேர் பலி

6 hours ago 2

பேங்காக்: மியன்மார் ராணுவம் வார இறுதியில் மகப்பேறு மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில், பச்சிளங்குழந்தை உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு காலத் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ராணுவ ஆதரவிலான அரசாங்கம் தனது தூதரக உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்யும் வேளையில், அந்தக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பெரும் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்ப்புக் குழுக்களிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராணுவ ஆதரவு அரசாங்கத்தின் பேச்சாளர் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

முன்னதாக, ‘பயங்கரவாதிகளுக்கு’ எதிராகச் சட்டபூர்வமான நடவடிக்கையைத் தான் மேற்கொள்வதாக அது குறிப்பிட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள நான்கு நகரங்கள்மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு மாநிலத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரக்கான் ராணுவம் அதன் தலைநகரான சிட்வேயை நெருங்கி வருவதால், அண்மை வாரங்களாகச் சண்டை தீவிரமடைந்துள்ளது.

‘கியாக்டாவ்’ பகுதியில் உள்ள பாலம் ஒன்று, ‘கியாக்பியூ’, ‘பாக்டாவ்’ ஆகிய இடங்கள், அரக்கான் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ம்ராக்-யூ’ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருந்தகம், மகப்பேறு வார்டு ஆகியவற்றின்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

Read Entire Article