சென்னை, அக். 24- மழைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் மின்வாரியப் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மின்சார வாரியம் அறி வுறுத்தி உள்ளது.
கனமழை, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின்சார விநியோகக் கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் சிசிவு, மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களும், வாரியப் பணியாளர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கசிந்தப் பெட்டிகள், மின்கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகளின் அருகில் செல்வதையும், அவற்றின் அருகே தேங்கியுள்ள மழை நீரில் இறங்குவதையும் தவிர்க்கவேண்டும். இத்தகைய விபத்துகளைக் கண்டால் மி ன்வாரிய அலுவலத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தரையையோ, சாலையையோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அகற்றுப்படுத்தவோ கூடாது. குழந்தைகளையும், அருகில் செல்லவிடாமல் எச்சரித்து, உடனடி யாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது திறந்தவெளி, தனித்த மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாது காப்பான கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும். திறந்த ஜனன்னல்கள், கிரில்கள் அருகில் நிற்பதையும், இடியின் போது மின்சாதனங்கள் மற்றும் தொலை பேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் கசியும் ஈரமான சுவர்கள், ஈரமான சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களைத் தொடக்கூடாது. குழந்தைகள் மின் கம்பங்கள் அருகில் விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டாம். மின்கம்பிகள் மற்றும் ஸ்டேகம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மின் விபத்துத் தடுப்புக் கருவிகளை வீட்டில் பொருத்த வேண்டும். அவசர உதவிக்கு ‘மின்மயம்’ மின்வாரிய சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகத் தொடர்புகொள்ளலாம்.
மின்வாரியப் பணியாளர்கள் மின்சாரப் பணிகளைத் தொடங்கு வதற்கு முன் உரிய அனுமதிபெற்று பின்னர் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைக் கவசம், மின் காப்புக் கையுறைகள், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புப் இடுப்புப்பட்டை மற்றும் பணிக்குத் தேவையில்லாமல் எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அறுந்த மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், சேத மடைந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளில் விழுந்த மரக் கிளைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் தடைப் புகார்களுக்கு உடனடியாக பதிலளித்து, களப் பணியாளர்களை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கனமழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின்போது ஆபத்தான பணிகளைத் தவிர்த்து, சூழநிலைக்கேற்ப பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணியாளர்களின் உயிர் பாதுகாப்பு உறுதிசெய்த பின்னரே பழுதுநீக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
.png)
59 minutes ago
1






English (US) ·