Last Updated:Nov 23, 2026 8:48 PM IST
திருச்சியில் கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப பிரச்சினை கொலையில் முடிந்ததன் பின்னணி என்ன?.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் 50 வயதான செந்தில்குமார். இவரது மனைவி 42 வயதான கலாராணி. இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், கூலித் தொழிலாளியான செந்தில்குமார், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. விடிய விடிய மதுபோதையில் தகராறு செய்து மனைவியை உறங்க விடாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று இரவும் அதே தான் வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார், மனைவியை கடுமையாக கண்டித்துவிட்டு போதையில் படுத்து உறங்கி உள்ளார். ஆனால் அதில் மிகவும் ஆக்ரோஷமான மனைவி கலாராணி, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து கணவன் தலையில் போட்டுள்ளார். இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கலாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் அங்கு வந்தனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் பெண் கொலை விவகாரம் - தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
ரத்த வெள்ளத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். கணவனைக் கொலை செய்து கண்ணீருடன் அமர்ந்திருந்த கலாராணியைக் கைது செய்தனர். மதுபோதையில் தொடர் தொல்லை கொடுத்ததால், கலாராணி தனது கணவனைக் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
இரண்டு சிறுவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்தக் குடும்பத் தகராறு, ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாக முடிந்திருப்பது திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.png)








English (US) ·