''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' - அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

5 hours ago 1

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது குறித்துக் காவல்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.

Published:Just NowUpdated:Just Now

அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் ( d.dixith )

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட செய்தி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரின் கைது குறித்துக் காவல்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.

அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ்d.dixith

அந்த விளக்கக் குறிப்பில், "தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களைச் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Read Entire Article