திரையுலகில் நடிகர்களைவிட நடிகைகளுக்குத்தான் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்று பிரபல இந்தி நடிகை கஜோல், 51, கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் கஜோல்.
இவர் தமிழில் ‘மின்சார கனவு’, ‘வேலையில்லா பட்டதாரி-2’ ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஆவார்.
51 வயதிலும் அழகு குறையாமல் வலம் வரும் கஜோல், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
“பொதுவாக நடிகர்களைவிட நடிகைகள்தான் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது,” என்று குறிப்பிட்டதுடன், “அந்தச் சவால்களில் மிகவும் முக்கியமானது தங்களது வயதைத் தோற்றத்தில் காட்டக்கூடாது என்பதுதான்,” எனக் கஜோல் தெரிவித்தார்.
இங்கு என்னதான் திறமை இருந்தாலும், வயதை வைத்து விமர்சிக்கும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எந்தச் சூழலிலும் நடிகைகள் இதில் சுணக்கமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், “உங்கள் வயதைக் குடும்பத்தார் தவிர வேறு யாருமே யூகிக்க முடியாதபடி நடமாடுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
“அது நமக்குள் தன்னம்பிக்கையை இன்னும் அழுத்தமாக வளரச் செய்யும்,” என்றும் கஜோல் சொன்னார்.
அவரது இந்தக் கருத்துகள் சமூக ஊடகங்களில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
.png)





English (US) ·