நடிகை ராதிகா வீட்டு பணியாளர் மகன் கொலை… குற்றவாளிகள் சொன்ன ஷாக்  தகவல்.. பின்னணி என்ன?

1 hour ago 1

Last Updated:Oct 30, 2026 4:59 PM IST

நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம். 

நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - எழில் செல்வி தம்பதி. இவர்களின் மகன் பிரசாந்த் (வயது 19). இவரது தாய் எழில் செல்வி சென்னையில் உள்ள நடிகர் சரத்குமார், ராதிகா வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மகன் பிரசாந்த் டைல்ஸ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரசாந்த், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரசாந்த்தை தேடி வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் செல்போன் டவர் லொகேஷன் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவத்துறை சார்ந்த தேவராசு (18) தினேஷ் (23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நண்பர்களான இவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளதாகவும், இதனால்,  தேவராசு, தினேஷும் இணைந்து பிரசாந்தை பொன்னேரி கடற்கரை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து பிரசாந்தை அடித்து கொன்று, புதைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து எதற்காக இந்த கொலை நடந்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article