Last Updated:Oct 26, 2026 1:20 PM IST
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா திருமணம் முடிந்திருக்கிறது. அர்ஜுன் மகளை மணந்தவர் யார், என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுன் 90களில் டாப் நடிகராக வலம் வந்தவர். தற்போது வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் அர்ஜுன். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பெரிதாக அவருக்கு படங்கள் கை கொடுக்கவில்லை, சமீபத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. அவரை தொடர்ந்து தற்போது தனது இளைய மகள் அஞ்சனாவுக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் அர்ஜுன்.
அண்மையில் இத்தாலியில் அஞ்சனாவின் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் முடிந்திருக்கிறது. அஞ்சனா தனது 14 வருட காதலரான இசையா நட்டர் (Isaiah Nutter) என்பவரை கரம்பிடித்திருக்கிறார். இவர்களது திருமணம் இருவீட்டார் முன்னிலையில் இரு மதங்களின் முறையில் இத்தாலியின் டஸ்கனியில் நடைபெற்றிருக்கிறது.
திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் அர்ஜுன், "இன்று என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் செல்ல மகள் தனது வாழ்நாள் துணையை கண்டுகொண்டாள்; இதைவிடப் பெருமைக்குரிய விஷயம் வேறென்ன இருக்க முடியும். என் அழகான மகள் அஞ்சனாவுக்கும், என் அன்புக்குரிய மருமகன் இசையாவுக்கும் வாழ்த்துகள்.
ஒவ்வொரு விடியலிலும் உங்கள் அன்பு இன்னும் வலிமையடையட்டும்; உங்கள் இல்லம் எப்போதும் சிரிப்பொலியாலும், அன்பின் கதகதப்பாலும், ஆசிகளாலும் நிறைந்திருக்கட்டும்.
குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம், மகனே! இத்தாலியின் டஸ்கனி பகுதியில், 'வில்லா செட்டினாலே' எனும் இடத்தில், இரு ஆன்மாக்கள் ஒன்றிணைந்தன. உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்! நாங்கள் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறோம்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா, இவர் சினிமாவின் பக்கம் தலைகாட்டவில்லை. எனினும், பிசினஸில் ஆர்வம் கொண்ட அவர் தனது சகோதரியுடன் இணைந்து பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!
நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.
இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.
இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!
.png)







English (US) ·