சோல்: தென்கொரியாவின் வருடாந்தரக் கல்லூரி நுழைவுத் தேர்வில் திறன்கண்ணாடிகளைப் பயன்படுத்தி முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டின் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அவற்றில் குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது அல்லது காவல்துறை விசாரணையைக் கோருவது உள்ளிட்டவையும் அடங்கும். முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு விதிக்கப்படும் தடையை, தற்போதைய ஓர் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் பரிசீலித்து வருவதாக வியாழக்கிழமை (அக்டோபர் 29) அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் சொந்த சேர்க்கைத் தேர்வுகளுக்கும் இதேபோன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்துமாறு அமைச்சு வலியுறுத்தும்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ‘சுனியுங்’ (Suneung) எனப்படும் கல்லூரிப் படிப்புத் தகுதித் தேர்வின்போது, திறன்கண்ணாடிகளையும் மற்ற தடைசெய்யப்பட்ட சாதனங்களையும் அடையாளம் காண உதவுவதற்காக, நாடு முழுவதும் உள்ள 1,312 தேர்வு நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பணியாளரை அதிகாரிகள் நியமிக்கவுள்ளனர்.
அதோடு, சிறப்பு நிறுவனங்களால் தற்போது உருவாக்கப்பட்டுவரும் வானொலி அலைவரிசைக் கருவிகளின் செயல்திறனை மதிப்பிடவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. பயன்பாட்டிற்கு ஏற்றவையாகக் கருதப்பட்டால், 2027ஆம் ஆண்டுமுதல் அத்தகைய கருவிகள் தேர்வு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.
.png)







English (US) ·