புதுடில்லி அக். 24- சமூகத்தில் பின்தங்கிய, விளிம்புநிலை மக்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கக் கூடிய ‘பிஎம்-தக்ஷ்’ திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக ‘பிஎம்-தக்ஷ்’ திட்டத்தை செயல்படுத்தத் தவறியதும், முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் போனதும், மோடி அரசின் மற்றொரு பெரும் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தை, மோடி அரசு வெறும் காகித அளவிலான நடைமுறையாக சுருக்கிவிட்டது. ஒரு திட்டத்தைக் கூட முறையாக செயல்படுத்த முடியாத அரசுக்கு, ஆட்சியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. மோடி அவர்களே, உங்கள் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஜென்-ஸிக்களின் எதிர்காலத்தை வைத்து மோடி அரசு எவ்வளவு காலம் விளையாடப் போகிறது? 2024 தேர்தலில் வெறும் 240 இடங்களுக்கு சுருங்கிப்போனதற்காக, மோடி அரசு பட்டியல் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோரை பழிவாங்குகிறதா? என்றார்.
.png)
50 minutes ago
1






English (US) ·