திருவண்ணாமலை தீபம் 2026: பக்தர்களுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்.. இதில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

12 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 6:17 PM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 செயலி மற்றும் வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபம் 2026
திருவண்ணாமலை தீபம் 2026

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026-யை ஓட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கார்த்திகை தீபம் 2026 எனும் செயலி மூலம் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அறிந்து கொள்ள முடியும். கார்த்திகை தீபம் 2026 செயலி வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதற்கு Hi என மெசேஜ் அனுப்பும்போது பக்தர்களுக்கான அடிப்படை தகவல்களை Location உடன் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயலியை புதுப்பித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2026 கடந்த 15 ஆம் தேதி கொடிற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நாளை காலை 4 மணிக்கும், மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படவுள்ளது. இந்தாண்டு திருவண்ணாமலைதீப திருவிழாவிற்கு 50 லட்ச பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றயை தினமே பல்வேறு மாவட்டங்கள் இருந்தும், பிற மாநிலங்களிலும் இருந்தும் அதிகளவு பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு எதிரொலி : திருப்பரங்குன்றம் கோயிலில் பலத்த பாதுகாப்பு

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண வரும் பக்தர்களுக்காக கார்த்திகை தீபம் 2026 எனும் செயலியை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியின் மூலம் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களின் இருப்பிடங்கள் கார் நிறுத்தும் இடங்களின் இருப்பிடங்கள், மருத்துவ முகாம்களின் இருப்பிடங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவைகளின் இருப்பிடங்கள், இரு சக்கர ஆம்புலன்ஸ் இருப்பிடங்கள், தற்காலிக கழிப்பறைகளின் இருப்பிடங்கள், குடிநீர் எங்கெங்கு வைக்கப்பட்டுள்ளது, தீயணைப்பு சேவைகள் எங்கு உள்ளது, காவல்துறையின் உதவி, அன்னதான இடங்கள் ஆகிய இடங்களை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த செயலியில் வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு Hi என மெசேஜ் அனுப்பும் போது அதற்கான நமக்கான தகவல்களை தெரியப்படுத்தும். நமது இருப்பிடத்தில் இருந்து அருகே உள்ள மருத்துவ முகாம்களை Location ஆன் செய்து போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலில் திருவண்ணாமலை கோவில் வரைப்படத்தை பார்வையிடுதல் அருகே உள்ள வசதிகள் AI மூலம் காவல்துறை என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் Missing Children Helpline எண், பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்களின் பாதை வழிகள், காவல்துறை உதவி மற்றும் SOS அவசர சேவை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடுகள் இந்த செயலில் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இரண்டு மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலை தீபத்தின்போது பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த குறைபாடுகளை சரி செய்து புதுப்பித்து மாவட்ட நிர்வாகம் இந்த செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article