
சென்னை, அக். 24-
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் சிறப்புப் பகுதியான ‘பெண் இன்று’ சார்பில், சென்னையில் இன்று (அக். 25) மகளிர் திருவிழா நடைபெறுகிறது. திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இவ்விழா, காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறவுள்ளது. பெண்களுக்காக நடத்தப்படும் இவ்விழாவில் பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் பரிசுகள் இடம்பெறுகின்றன. காவல்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் வே. வனிதா ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையாற்றுகிறார். தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வாசகியருக்காக ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கலகலப்பான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
விழாவில் பங்கேற்கும் வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவும் நிச்சயப் பரிசும் வழங்கப்படும். ‘பெண் இன்று’ சார்பில் இந்த ஆண்டு தூத்துக்குடி, கடலூர், மதுரை, வேலூர்,
கோவை ஆகிய நகரங்களில் மகளிர் திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து, சென்னையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
.png)
1 hour ago
1





English (US) ·