சிங்கப்பூரின் தென்பகுதிக் கடற்பரப்பில் எண்ணெய்க்கசிவு

7 hours ago 1

சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள தீவுகளுக்கு அருகே கடற்பரப்பில் எண்ணெய்க்கசிவு காணப்பட்டதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தெற்கில் உள்ள புலாவ் செபாரோக், புலாவ் செமக்காவ், செலாட் பாவ் ஆகிய தீவுகளுக்கு அருகே கடற்பகுதியில் எண்ணெய்த்திட்டுகள் தென்பட்டன.

அதனால், அவற்றை அகற்றுவதற்காக உரிய ஒப்பந்ததாரர்களை அழைத்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

எண்ணெய்க்கசிவு ஏற்பட்டதற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிடப்பட்ட தீவுகளுக்கு அருகில் எண்ணெய்த்திட்டுகள் கடலில் மிதப்பது வானிலிருந்து நடத்தப்பட்ட கண்காணிப்பில் கண்டறியப்பட்டது.

இருப்பினும், வெஸ்ட் கோஸ்ட், செந்தோசா, தெற்குத் தீவுக் கூட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய பகுதிகளில் எண்ணெய்க்கசிவு காணப்படவில்லை.

எண்ணெய்த்திட்டுகளை அகற்றும் பணியில் தனது ஒப்பந்ததாரர்களையும் அப்பகுதிகளிலுள்ள முனையங்களையும் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது.

தேவைப்பட்டால் கடற்கரைகளில் பாதுகாப்பு செயல்பாடுகளை ஏற்பாடு செய்யும்படி சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்த்திட்டுகளைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி சிங்கப்பூர் கடலை வந்தடைந்த கப்பல்களையும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read Entire Article