Last Updated:Nov 23, 2026 8:52 PM IST
தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைந்ததை தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த நவம்பர் 19ஆம் தேதி காலமானார்.
முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்திருந்தார்.
அதேபோல், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 4 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் தமிழ்நாட்டில் மொத்தம் 5 தொகுதிகள் காலியானது.
இந்தத் தொகுதிகளின் தேர்தல் வெற்றியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், இடைத்தேர்தல் அறிவிப்பதில் சட்டரீதியான தடைகள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், வி.எஸ். பாபு மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் ஆறாக உயர்ந்துள்ளது. இந்த ஆறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)








English (US) ·