காவிரி நீரிலும் சிக்கல் – மேகதாது அணை மற்றொரு அபாயம்! தமிழ்நாடு நீர் நிலைகளில் 36 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு! தமிழ்நாட்டின் எதிர்காலம்?

13 minutes ago 1

சென்னை, நவ.23 காவிரி நீரிலும் சிக்கல் – மேகதாது அணை மற்றொரு அபாயம்! தமிழ்நாடு நீர் நிலைகளில் 36 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் எதிர்காலம்? கேள்விக்குறி யாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு விவசாயிகளுக்கு நிகழாண்டு இதுவரை ஏமாற்றமே மிஞ்சி யுள்ளது. போதிய மழை பெய்யாததால், விவசாயப் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை முழுமையாக நிரம்பவில்லை. இதனால், அடுத்தடுத்த சாகுபடிப் பரு வங்களில் பாசனத்துக்கும், கோடைக் காலத்தில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை முக்கிய நீராதாரமாக விளங்கினாலும், தமிழ்நாட்டுக்கு வடகிழக்குப் பருவமழையே அதிக மழைப்பொழிவை அளிக்கிறது. நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாகப் பதிவானது. இதனால், வட கிழக்குப் பருவமழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனா். இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 15 ஆம் தேதி தொடங்கியது. ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான அா்னாப், முரசு, அக்வான் ஆகிய 3 புயல்களும் ஆந்திர மாநிலப் பகுதிகளிலேயே கரையைக் கடந்தன. இதனால், தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டிய மழை மேகங்கள் வடக்கு நோக்கி நகா்ந்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழைப்பொழிவு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, ஆறுகள், ஓடைகள் வழியாக அணைகள் மற்றும் பாசன ஏரிகளுக்குக் கிடைக்க வேண்டிய நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால், விவசாயப் பாசனத்துக்குப் பயன்படும் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீா் சேமிப்பு குறைந்துள்ளது.

48.4 சதவீதம் சரிவு

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படும் 15 முக்கிய நீா்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 1,98,324 மில்லியன் கனஅடி. இதில், 20.11.2026 ஆம் நாள் நிலவரப்படி 71,793 மில்லியன் கனஅடி (36.2 சதவீதம்) மட்டுமே நீா் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,68,524 மில்லியன் கனஅடி (85 சதவீதம்) நீா் இருப்பு இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு 96,731 மில்லியன் கனஅடி நீா் இருப்பு குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48.8 சதவீதம் குறைவாகும்.

தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமான மேட்டூா் அணையின் முழுக் கொள்ளளவு 93,470 மில்லியன் கனஅடி. இதில், 20.11.2026 ஆம் நாள் நிலவரப்படி 25,841 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அதேபோல், பவானிசாகா் அணையில் 15,203 மில்லியன் கனஅடி, வைகை அணையில் 2,685 மில்லியன் கனஅடி, பாபநாசம் அணையில் 1,966 மில்லியன் கனஅடி, சாத்த னூா் அணையில் 4,188 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அமராவதி, சோலையாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளிலும் நீா் இருப்பு குறைந்துள்ளது.

நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு குறைந்துள்ள நிலையில், நிலத்தடி நீா்மட்டமும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சரிந்துள்ளது. நிகழாண்டு அக்டோபா் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்க ளில் 37 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே சிறிய அளவில் உயா்வு பதிவாகியுள்ளது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்களைச் சார்ந்துள்ள விவசாயிகள் மட்டுமன்றி, கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாசனம், குடிநீருக்கு ஆபத்து

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறிய தாவது:

போதிய பருவமழை பெய்யாததால், தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் அணைகளில் நீா் இருப்பு குறைந்துள்ளது. அவற்றைச் சார்ந்துள்ள பாசன ஏரிகள், குளங்களிலும் போதிய அளவு நீரைச் சேமிக்க முடியவில்லை. இதனால், அடுத்தடுத்த சாகுபடிப் பருவங்களுக்குத் தேவையான நீரை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அணைகளிலிருந்து பாசனத்துக்காக நீா் திறக்கப்படும் பகுதிகளில் கிடைக்கும் நீரைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு குறைவது விவசாயத்தை மட்டுமன்றி, நகா்ப்புற மற்றும் கிராமப்புற குடிநீா் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மழைப்பொழிவு குறையும் சூழலில் கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள ஒன்றரை மாத வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையை முழுமையாகச் சேமித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்ப் பற்றாக்குறை தொடா்ந்தால், கோடைகால சாகுபடியை விவசாயிகள் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளைத் தூா்வாரி, அவற்றின் நீா் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடிநீா்த் தேவைக்கு முன்னுரிமை அளித்தல், பாசன நீா் பயன்பாட்டைத் திட்டமிடுதல், நீா்த்தேக்கங்களில் உள்ள நீரை முறையாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவா்.

Read Entire Article