உறுதிப்படுத்தப்படாத தகவல்.. இப்போது பேச வேண்டாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமைச்சர் திட்டவட்டம்.

6 hours ago 1

Last Updated:Nov 02, 2026 6:42 PM IST

கோவையில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று வழங்கினார்.

அமைச்சர் சம்பத் குமார்
அமைச்சர் சம்பத் குமார்

கோவையில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகம்ரேஷன் கடைகளில் விற்கப்படும் வெங்காயத்தின் தரம் குறித்துப் பேசிய அமைச்சர், "பொதுமக்களுக்கு தரமான வெங்காயத்தை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை இதுதொடர்பாக எந்தப் புகாரும் எழவில்லை" என்றார்.

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் குறித்துப் பதிலளித்த அவர், "கைதியைத் தேடும் பணியில் தனிப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காவல்துறை முழு வீச்சில் விசாரணை நடத்தி வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, உரிய தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் சம்பத்குமார், "மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. நாங்கள் பணத்தைக் கொடுத்து வெற்றி பெறவில்லை; இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். முந்தைய ஆட்சியைப் போல எங்களது ஆட்சி இருக்காது. தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும், முதலமைச்சர் நிச்சயமாக நிறைவேற்றுவார். அதற்கான கால அவகாசம் இன்னும் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனி கொடி குறித்துப் பேசியது தொடர்பான கேள்விக்கு, "ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பதைப் போல, இதுவும் ஒரு நல்ல விஷயம்தான்" எனப் பதிலளித்தார்.மேலும், பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், "புதிய சைக்கிள்களுக்கான டெண்டர் பரிசீலனையில் உள்ளது; இதுவரை எதுவும் முடிவாகவில்லை. புதிய மாடல் மற்றும் வண்ணத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதால், எந்த காலதாமதமும் இன்றி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

முதலமைச்சர் நாளை கோவை வந்து, பின்னர் ஈரோடு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, "அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல்; எனவே, அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

Read Entire Article