சென்னை, அக். 30– “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் காட்சிப் பதிவுகளைத் தயாரிக்கவும், முதலமைச்சர் மேடையில் ‘பஞ்ச்’ வசனம் என்ற பெயரில் பலவகையில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் பிரேக்கிங் நியூசையும் திசைதிருப்ப ‘ரோடு ஷோ’ நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் தவெக எனும் ‘தமிழ்நாடு பிரான்ச் வாசிங்மெயின்’ திமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் ‘வெட்டி வேந்தாந்தா பாலிடிக்ஸ்’ திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் காட்சிப் பதிவுகளைத் தயாரிக்கவும் – முதலமைச்சர் மேடையில் பன்ச் டயலாக் என்ற பெயரில் பல மடலேசனில் இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப் பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வி னருக்கு வாய்ப்பூட்டுப் போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் தவெக அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
.png)
1 hour ago
2







English (US) ·