Last Updated:Nov 04, 2026 9:39 PM IST
அமைச்சர் ரமேஷ் அசைவ உணவு சாப்பிட்டதாக எழுந்த விமர்சனத்திற்கு பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மதிய உணவு விருந்தளித்து, புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளி பட்டாசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விவசாயி அய்யாக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அசைவ உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், அமைச்சரும் விவசாயிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இது தொடர்பான வீடியோக்கள் பரப்பப்பட்டு, அமைச்சர் அசைவ உணவு உட்கொண்டார் என பரப்பப்பட்டது. உடனடியாக அமைச்சரின் அருகிலேயே அமர்ந்து உணவு அருந்திய விவசாயி அய்யாக்கண்ணு இதற்கு மறுப்பு தெரிவித்து, “அன்றைய தினம், நானும், அமைச்சரும் காய்கறிகளால் செய்யப்பட்ட உணவையே சாப்பிட்டோம். அமைச்சர் அசைவ உணவு எதுவும் சாப்பிடவில்லை” என விளக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், “நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க அமைச்சர் சைவம் உண்கிறாரா? அசைவம் உண்கிறாரா? என்பது ஒரு விவகாரம் அல்ல, அப்படியே அவர் அசைவம் உண்டாலும், 'அவர் தட்டு, அவர் உணவு' என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஒரு விழாவில் அசைவ உணவு சாப்பிட்டு விட்டார் என்று ஒரே அலப்பறை. 'ஐயோ'! பிராமண சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று சமூக ஊடகங்களில் ஒப்பாரி!
அந்த அலப்பறையையும், ஒப்பாரியையும் செய்வது யார் தெரியுமா? 'என் தட்டு, என் உணவு' என ஒப்பாரி வைத்தவர்கள் தான். பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அசைவ உணவு உண்டால் 'ஐயோ' என்று அலறுபவர்கள், மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சைவ உணவு பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் பெருமையாக சொல்லிக் கொள்வது தான் விந்தை!
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க அமைச்சர் சைவம் உண்கிறாரா? அசைவம் உண்கிறாரா? என்பது ஒரு விவகாரம் அல்ல, அப்படியே அவர் அசைவம் உண்டாலும், 'அவர் தட்டு, அவர் உணவு' என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்கள் ஜாதி அவரவர்களுக்கு பெருமை. மற்ற ஜாதியை சிறுமைப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. உண்மையில் ஜாதிய வெறியர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

படுதோல்வியடைந்த டிரம்ப் கட்சி... இந்தியாவிற்கு என்ன பலன்? H-1B விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
பல இடங்களில் படுதோல்வியை அடைந்து பெரும்பான்மையை இழந்திருக்கிறது டிரம்ப் கட்சி.
இதனால் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?
H-1B விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
.png)




English (US) ·