ஃபஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் படத்தின் டைட்டில் ‘அசரீரி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

22 hours ago 1

Last Updated:Nov 23, 2026 8:54 PM IST

ஃபஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் படத்துக்கு ‘அசரீரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் படத்துக்கு ‘அசரீரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘96’. இந்தப் படத்தை இயக்கியவர் பிரேம்குமார். இவர் இயக்கத்தில் 2வதாக வெளியான படம் ‘மெய்யழகன்’. இந்தப் படமும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஃபஹத் பாசில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

‘அசரீரி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தில் நாயகியாக ஷிவதா நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Come closer. We have a word to whisper.


#VelsFilmIntlProd32 is
||ı||ı Asareeri ı||ı||

#AsareeriFromJan1

Presented by @IshariKGanesh

Produced by @VelsFilmIntl in Association with @Monsoon_Movies

Written & Directed by @dirpremkumar96
Starring: #FahadhFaasil
Music by #GovindVasantha

@kushmithaganesh @Sshivadaoffcl @Chetan_k_a @harishuthaman #Karunakaran @Actorsarann #mahendiranjayaraju @R_Govindaraj @MaheshMathewMMS @subhaskaar @gopiprasannaa @proyuvraaj @kumar_gangappan #UmadeviK @iamKarthikNetha #jenifer_M_A @Valentino_suren @alagiakoothan @phantomfx_india @kav_pandian @thetabsofficial #Asareeri

— Vels Film International (@VelsFilmIntl) November 23, 2026

முன்னதாக ‘மெய்யழகன்’ படத்தை தொடர்ந்து பிரேம்குமார் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article