Last Updated:Oct 23, 2026 12:37 PM IST
Special Summary Revision | தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ,விடுதலை சிறுத்தைகள், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அனைத்து கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து, தவெக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தக் கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறின.
தமிழகத்தில் 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னதாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளான தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுக சார்பில் ஆஸ்டின், பரந்தாமன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், தனபால், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிக, தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள், நாம் தமிழர் மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
.png)








English (US) ·