'ராமாயணா' படத்திலிருந்து வெளியான 'மங்கல் ரங்' பாடல் விவாதத்தைக் கிளப்பி இருந்தது.
Published:Just NowUpdated:Just Now

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகயிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனிடையே படத்திலிருந்து வெளியான 'மங்கல் ரங்' பாடல் விவாதத்தைக் கிளப்பி இருந்தது.

ராமாயணா
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்தப் பாடல், ராமர் - சீதை திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே விமர்சனத்திற்கு உள்ளானது.
புராணக் காவியமான ராமாயணத்தில் சீதா-ராம கல்யாணத்தைச் சித்தரிக்கும் பாடலுக்கு கவ்வாலி மற்றும் சூஃபி இசையின் சாயல் இருப்பது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்றும், ரஹ்மானின் 'குன் ஃபயா குன்' பாடலின் குரல் அமைப்பை இது நினைவுபடுத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து 'Indian Express'-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்.
"ராமாயணப் படத்தின் இசைக் குறித்த விமர்சனங்களுக்காக எனது தூக்கத்தை இழக்க நான் விரும்பவில்லை. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியதைப் போல அனைவரையும் மகிழ்விக்க நினைத்தால் தலைவராக இருக்க முடியாது, அப்படி மகிழ்விக்க நினைத்தால் அதற்கு ஐஸ் கிரீம் விற்கலாம்.

ஏ.ஆர் ரஹ்மான்
நானே எனக்கு முதல் விமர்சகன். ஒரு பாடலை நாங்கள் ஒரே நாளில் உருவாக்குவதில்லை. மாதக்கணக்கில் யோசித்துதான் உருவாக்குகிறோம். மக்கள் ஒரு பாடலின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து உடனே கருத்து தெரிவிக்காமல், முழுமையான உணர்ந்து கொள்ள சிறிது பொறுமை காக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
.png)






English (US) ·