Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain... உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!

58 minutes ago 1

ஸ்பீட் பிரேக்கில் ஏறி, இறங்குவது, ஓரிடத்திலிருந்து கீழே விழும்போது, உட்கார்ந்த நிலையில் விழுவது போன்ற தருணங்களில் எல்லாம் இந்த வால் எலும்புதான் முதலில் பெரிதும் பாதிக்கப்படும்.

Published:Just NowUpdated:Just Now

மனிதர்களுக்கும் வரும்  Tailbone Pain

மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain ( AI image )

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது.

மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி என்று சொல்லி, சரியான பொசிஷனில் உட்காராததால் வந்ததாகச் சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கு வாலே இல்லாத நிலையில், அதென்ன வால் எலும்பு வலி...? யாருக்கு வரும்... என்ன தீர்வு?

பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

காக்சிடெனியா (Coccydynia) எனப்படும் இந்த வலிக்கு, 'டெயில்போன் பெயின்' (Tailbone Pain) அதாவது, வால் எலும்பு வலி என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதாவது நம்முடைய வால் எலும்பில் ஏற்படுகிற வலியைக் குறிப்பது இது.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்க மிச்சமிருக்கும் சில ஆதாரங்களில் மனிதர்களின் டெயில் போனும் ஒன்று. டெயில் போன் என்பதை தமிழில் 'வால் எலும்பு' என்று சொல்கிறோம். குரங்குகளுக்கு வாலுக்குள் இருக்கக்கூடிய எலும்புகள் எல்லாம் நமக்கு ஒன்றாகச் சேர்ந்து, ஒரே எலும்பாக,  சிறிய குறுத்தெலும்பு போல நம்முடைய முதுகெலும்பின் அடியில் இருக்கும்.

மனிதர்களுக்கு இந்த எலும்பு ஏன் அவசியம் என்ற கேள்வி எழலாம். இந்த வால் எலும்புதான் நம் இடுப்புத் தசைகளின் செயல்பாட்டுக்கான முக்கியப் பகுதி. உட்காரும்போது நம்மில் எத்தனை பேர் நேராக, நிமிர்ந்து உட்கார்கிறோம்.... பலரும் சரிந்தபடியே உட்கார்வதைப் பார்க்கலாம். அப்படி உட்காரும் பட்சத்தில் நம் எடையைத் தாங்கும் வேலையை இந்த வால் எலும்புதான் செய்கிறது

AI image

AI image

சரியாக உட்காரும்போது வால் எலும்பில் உடலின் எடை விழாது. அது எடையைத் தாங்குவதற்காக உருவாகிய எலும்பு அல்ல. ஆனால், அசாதாரணமாக உட்கார்ந்தே பழகும்போது, நம் உடலின் எடை அந்த எலும்பில் விழும்.  எல்லா எலும்புகளையும்போல, காலப்போக்கில் இந்த வால் எலும்பிலும் அழுத்தம், தேய்மானம், முறிவு போன்றவை ஏற்படலாம்.

டூ வீலரிலோ, பேருந்திலோ  செல்லும்போது, தூக்கித்தூக்கிப் போடுவது, ஸ்பீட் பிரேக்கில் ஏறி, இறங்குவது, ஓரிடத்திலிருந்து கீழே விழும்போது, உட்கார்ந்த நிலையில் விழுவது போன்ற தருணங்களில் எல்லாம் இந்த வால் எலும்புதான் முதலில் பெரிதும் பாதிக்கப்படும். 

பிரசவ காலத்தில், சுகப்பிரசவம் ஏற்படும் நிலையில், குழந்தையின் தலை பெரிதாக இருக்கும்போது, அது வால் எலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாலும் இந்த வலி வரலாம்.

வால் எலும்புக்குப் பெரிய அசைவுகள் கிடையாது. அதனால் பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடக்கூடிய தொந்தரவுதான் இது. எனவே, வலி அதிகரிக்கும்போது ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் அந்த எலும்பில் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே சரியாகிவிடும்.

இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்ந்தால் அதை க்ரானிக் பெயின், அதாவது நீண்டகாலமாக நீடிக்கும் வலி என்று சொல்வோம். அந்த நிலையில் மருத்துவரை அணுகி, வலியையும் வீக்கத்தையும் குறைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து 'டோனட் குஷன்' (Donut Cushion) என்பதைப் பயன்படுத்தலாம்.  இந்தத் தலையணையின் மீது உட்காரும்போது, வால் எலும்பின்மீது, உடலின் அழுத்தம் விழுவது தவிர்க்கப்படுவதால், வலி குறையும்.

வால் எலும்பின்மீது அழுத்தம் விழாதபடி எப்படி உட்கார வேண்டும் என்பதையும் மருத்துவர் கற்றுத் தருவார்.

வால் எலும்பின்மீது அழுத்தம் விழாதபடி எப்படி உட்கார வேண்டும் என்பதையும் மருத்துவர் கற்றுத் தருவார்.

வால் எலும்பின்மீது அழுத்தம் விழாதபடி எப்படி உட்கார வேண்டும் என்பதையும் மருத்துவர் கற்றுத் தருவார். அவர் கற்றுத் தரும்படி சாயாமல் சரியான பொசிஷனில் உட்கார வேண்டும்.
இவை எதற்குமே கட்டுப்படாதபோது, 'கேங்லியான் இம்பார் பிளாக்' (ganglion impar block) என்ற ஊசி சிகிச்சைதான் தீர்வு.

எக்ஸ் ரே உதவியுடன், வால் எலும்புக்குள் ஊசி போடப்படும். அதன் மூலம், வால் எலும்பைச் சுற்றியுள்ள காயம் ஆறி, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

டாக்டர் நித்யா மனோஜ்:

சேலத்தில் உள்ள  Balaji Robotic Rehabilitation Hospital-ன்   புனர்வாழ்வு மற்றும் வலி மேலாண்மை சிறப்பு மருத்துவர். இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Read Entire Article