42 வருட காத்திருப்புக்குப் பின் தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்த கோயில் தேர் !

1 hour ago 1

Published : Oct 25 2026, 07:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில், சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் தேரின் ரோட்டோட்டம் (Trial Run) வெற்றிகரமாக நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தலித் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் தேர் சென்று வரும் வகையில் இந்த ரோட்டோட்டம் நடத்தப்பட்டது. 42 வருடங்களுக்குப் பிறகு தங்கள் பகுதிக்குத் தேர் வந்ததைக் கண்டு அப்பகுதி தலித் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தேரை எதிர்கொண்டு வழிபாடுகள் நடத்தினர். சாதிய தடைகளை உடைத்து சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article