Last Updated:Nov 12, 2026 11:20 AM IST
“உலக அளவில் ராமாயணா படத்தை ‘ஓடிசி’ படத்துடன் மக்கள் ஒப்பிட்டு வருகின்றனர். உலக மக்களுக்காக இப்படியொரு படைப்பை உருவாகியுள்ளோம் என்பது பெருமையாக உள்ளது”

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்து வருகிறது. இருப்பினும், படம் வெளியாவதற்கு முன்பு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. காரணம், ‘ஆதி புருஷ்’ போல இந்தப் படமும் இருக்குமா? என்பது குறித்த பல்வேறு கருத்துகள் நிலவின.
சீதையாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது. அவர் இந்தப் படத்துக்கு பொருந்துவாரா? என சிலர் கேள்வி எழுப்பினர். மறுபுறம் ராமனாக நடிகர் ரன்பீர் கபூரின் தேர்வும் சரியில்லை என்று கருத்து தெரிவித்தனர். இப்படியாக படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ‘ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூரின் தாயாக நடித்த நடிகை இந்திரா கிருஷ்ணன் நியூஸ்18-க்கு அளித்த பேட்டியில், “இவ்வளவு பெரிய படத்தை உருவாக்குவது படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவுக்கு மிகப்பெரிய ரிஸ்க் என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தடைகளை தகர்த்தி, எல்லைகளை கடந்து, உலகத்துக்கு ராமாயணத்தை காட்சிப்படுத்தியுள்ளார். உலக அளவில் ‘ஓடிசி’ படத்துடன் இந்தப் படத்தை மக்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், படம் வெளியாவதற்கு முன்பு பலரும் இந்தப் படம் குறித்து சந்தேகத்துடனே இருந்தனர். ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர், என்னிடம், ‘மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவருக்கு தாயாக நீங்கள் நடிக்க போகிறீர்களா?’ என்று கேட்டனர். இப்படியாக நிறைய விஷயங்கள் நடந்தன. ரன்பீர் கபூர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், அது தொடர்பாக அவர் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவர் படப்பிடிப்புக்கு வந்து 200 சதவீத உழைப்பை கொடுத்தார். இந்தப் படம் வெற்றியடைய கூடாது என சிலர் நினைத்தனர். அப்படியானவர்கள் காசு வாங்கி கொண்டு ரன்பீர் கபூரை விமர்சித்தனர். இந்தப் படத்தை விமர்சிப்பதற்கு முன், உலக அளவில் இந்திய சினிமாவை கொண்டு செல்ல நாங்கள் முயற்சித்தோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ‘துரந்தர்’ படமும் வெளியானபோது, விமர்சனங்களைப் பெற்று பின்னர் சாதனை படைத்து. ‘ராமாயணா’ படத்தை வேறு படங்களுடன் ஒப்பிடமாட்டேன். காரணம், இது பிரம்மாண்டமான படைப்பு. உலக மக்களுக்காக இப்படியொரு படைப்பை உருவாக்கியுள்ளோம் என்பது பெருமையாக உள்ளது” என்றார்.

சாமந்தி பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்க... உரத்திற்கு பதில், வேப்ப எண்ணெய் வச்சு இதை செய்து பாருங்க!
உங்க வீட்டு பால்கனியில் சாமந்தி செடிகள் நன்றாக வளர வேண்டுமா?
அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?
முக்கியமான 5 டிப்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
.png)








English (US) ·